Monday, July 12, 2010

சுயம்


வேறென்று எதுவும்
எனக்கில்லைஎன்றாலும்
எனது கிளைகளின் இலைகளில்
மஞ்சள் இல்லை.

உச்சியே வேர்...

மரபுகளை
தகர்ப்பதின் அலுப்பை
பசிய இலைகள்
தீர்த்து வைக்கும்

சுத்த சுயப்பிரகசமாய்
உலகைக் கவித்துக்கொள்வதின்
சுகம்
எந்தப் பாதச்சுவடிலும்
இல்லை

கடலின் அழம்போல்
உயர்வானது சுயம் .

அதன் பெருவெளியில்
முட்டி முட்டி
உயிர்ப்பது
சிறு புல்லெனினும்
அதன் தோற்றம்
ஒரு அவதாரம்.





No comments:

Post a Comment

சொற்களின்

amma